பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? - திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
Sep 13, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றி வந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் வருகிறது என்றதும் கடந்த மூன்று மாதங்களாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

ஆனால், தேர்தல் வாக்குறுதிப்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்காமல், ‘உரிமை’யை, ‘தகுதி’யாக்கி 50 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்க திமுக அரசு மறுத்து விட்டது.

இப்படி உரிமைத் தொகை வழங்குவதில் ஏமாற்றிய திமுக அரசு, அடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையை தந்திரமாக தொடங்கியுள்ளது. நகர பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவச பயணம் என, சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் இலவச பயணத்தை அனுமதித்துள்ளது.

அதிலும் பெண் பயனாளின் எண்ணிக்கையைக் குறைக்க, இலவச பயணம் செய்யும் பெண்களிடம் மதம், ஜாதி, கல்வித் தகுதி, வேலை உள்ளிட்ட 15 வகையான விவரங்களை திமுக அரசு சேகரித்து வருகிறது.

மிகமிக குறைவான எண்ணிக்கையில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில் தான் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்கவே, வெளிப்படையாக அறிவிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றி வரும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். திமுக அரசு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: dmk failsbjp vanathi srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

அந்நிய, உள்நாட்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது படைகள் முழு திறனுடன் தயாராக உள்ளன! – குடியரசுத்தலைவர்

Next Post

பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies