நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தியாகம் உள்ளது! - உள்துறை அமைச்சர் அமித் ஷா
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தியாகம் உள்ளது! – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 06:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது என மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59-ம் ஆண்டு விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக்கொண்டார். மேலும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அவர் பார்வையிட்டார்.

பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மத்தியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

”பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. ஜி20 மாநாடு, சந்திரயான்-3 போன்ற வெற்றிகளின் பின்னால் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளது.

ஒரு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அந்த நாட்டுக்கு வளர்ச்சியும் செழிப்பும் இருக்காது. இதற்கான உங்களின் தியாகம் அளப்பறியது. நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் உங்களின் தியாகம் உள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வீரர்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

பாகிஸ்தான் எல்லையாக இருந்தாலும், பங்களாதேஷ் எல்லையாக இருந்தாலும் அங்கே எதிரியின் நகர்வு இருந்தால் அல்லது பதற்றம் இருந்தால் அங்கே நமது எல்லைப் பாதுகாப்புப் படை இருக்கிறது என்பதால், என்னால் பதற்றம் இன்றி அமைதியாக உறங்க முடிகிறது.

எல்லைப் பாதுகாப்பில் இருப்பவர்கள் வலிமையாக இருக்கும்போது, பதற்றத்துக்கு இடம் இருக்காது. உள்துறை அமைச்சராக உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

இடதுசாரி தீவிரவாதத்தின் நிலை குறித்து நேற்று ஆய்வு செய்தேன். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான இறுதிக்கட்டப் பணியில் நாம் இன்று இருக்கிறோம்.

இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாடு முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இடதுசாரி தீவிரவாதம் நாளுக்கு நாள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சிஆர்பிஎஃப், ஐடிபிபி, பிஎஸ்எஃப் ஆகியவை இறுதிக்கட்டத் தாக்குதலை நடத்த தயாராக உள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

வரும் நாட்களில் இது நடக்கும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதால் இடதுசாரி தீவிரவாதம் குறைந்து வருகிறது. ஜார்க்கண்ட்டின் சில பகுதிகளில் இன்னும் சண்டை எஞ்சி இருக்கிறது. அந்த சண்டையில் நாம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து!

Next Post

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies