’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Jun 15, 2026, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 2, 2023, 08:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில்   கடுமையான சூறைக் காற்றும் , மிக கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 440 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 580 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே தென்கிழக்கு 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வலுப் பெற்று வரும் நிலையில் , மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக மாறக் கூடும் .

அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலைகொள்ளும்.

தொடந்து,வடக்குத் திசையில் நகர்ந்து, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர்  5ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையைக்  கடக்கக்கூடும்” என தெரிவித்தார்.

வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், அடுத்துவரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர்  3ஆம் தேதியன்று, திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதியில், ஆந்திர கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

எனவே மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் தெரிவித்தார்.

Tags: chennai weatherMichuang CycloneIndia Meteorological DepartmenNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படைக்காக இந்தியாவில் உருவான 3 நீர்மூழ்கி கப்பல்கள்!

Next Post

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies