லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி : காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி : காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அங்கிட் திவாரி. கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இருந்த இவர், காலங்கரை எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். இவர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, மேல்விசாரணை நடத்தாமல் இருக்க கடந்த நவம்பர் 1-ம் தேதி 20 லட்சம்  லஞ்சம் பெற்றார்.

தொடர்ந்து, 2-வது தவணையாக டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து மேலும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக அங்கித் திவாரியை கைது செய்தனர். இதையடுத்து, அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் காவலில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, நேற்று காலை 7 மணி வரை என 13 மணி நேரம் நடந்தது.

பெண் ஊழியர்கள் மட்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது. இந்த சூழலில், அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், “அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு சில உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு பெரிய தொகையைக் குறிவைத்து லஞ்ச பேரம் பேசுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, இவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இச்சோதனை உதவி இருக்கிறது.

அந்த அதிகாரிகளுக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்த மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும். இதனிடையே, அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக நாளை மனுத் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

Tags: Enforcement departmentOfficerBribe
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டில் தொடரும் கனமழை: பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Next Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies