ஐநா- இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநா- இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எகிப்தால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தொடங்கி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரினால் காசா பகுதி முழுவதும் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் 33 குழந்தைகள் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் போரை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தல்களும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதனிடையே, இரு தரப்பும் போரை நிறுத்தி, பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டன. இந்த நிலையில், நேற்று  கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தில், ஒரு வரைவு தீர்மானத்தை எகிப்து தாக்கல் செய்தது.

இதில், உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை செய்ய வேண்டும் என்றும், பிடித்து வைத்திருக்கும் பிணயக்கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதை அடங்கியதாக இருந்தது.

இதனை அல்ஜீரியா, பக்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தின.

இதனையடுத்து, இந்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இவ்வாறு முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தின் மீது 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 10 உறுப்பு நாடுகள் எதிர்த்த நிலையில், 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.

Tags: IndiaUnited Nations
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

Next Post

ஏர் இந்தியா பணியாளர்களுக்கு புதிய சீருடை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies