ஏர் இந்தியா பணியாளர்களுக்கு மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த புதிய சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனமான டாடா, இந்திய அரசின் விமான சேவை நிறுவமான ஏர் இந்தியாவை வாங்கியது. தொடர்ந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவில் டாடா குழுமம் புதிய மாற்றங்களை கொண்டுவந்தது.
சமீபத்தில் விமானத்தின் லோகோ, டிசைன்களை மாற்றி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிய சீருடைகள் ஏர் இந்தியா கொண்டுவந்துள்ளது. இதன்படி, விமானப்பணி பெண்களுக்கு ஓம்ப்ரே புடவையும், ஆண்களுக்கு பந்தகாலாவும், விமானிகளுக்கு கிளாசிக் கருப்பு சூட் டிசைன் அறிமுகப்படுத்தி உள்ளது.
இவை அனைத்தையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளார். ஆறு தசாப்தங்களாக விமானங்களின் முன்னோடியாக விளங்கும் ஏர் இந்தியா, பணியாளர்களின் சீருடையை மாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் ஏர் இந்திய தனது எக்ஸ் பதிவில், ” ஏர் இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான உறுதிமொழி ” என்று பதிவிட்டுள்ளது.