தமிழ்நாட்டில் நலத் திட்டங்களை செயல்படுத்த 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு! - மத்திய அரசு
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் நலத் திட்டங்களை செயல்படுத்த 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு! – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் திரு ஜி.செல்வம், திரு தனுஷ் எம்.குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். இதே போல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,57,672 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2023 டிசம்பர் 6 நிலவரப்படி 5,83,813 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் 39 லட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 2,71,775 பேர் பயிற்சி பெற்று 2 லட்சத்து 47 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவலையும் அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 691 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022 – 2023 நிதியாண்டில் 19 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டம் – 2.0 மூலம் தமிழ்நாட்டில் 2021 – 2022 நிதியாண்டிலிருந்து 2023 – 2024 நிதியாண்டின் பாதி காலம் வரை 14ஆயிரத்து 146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களில் அனைவரையும் பயனடையச் செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு திட்டங்களின் பயனை பெறுவதில் எவரும் விடுபட்டு விடக் கூடாது என்பது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: central goverment
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சராக பதவியேற்ற மோகன் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies