காசி தமிழ் சங்கமம் 2.0 : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசி தமிழ் சங்கமம் 2.0 : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் 2.0 விழாவை  பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும்.  நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும். தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது

இந்நிலையில் காசி தமிழ் சங்கமத்தின் 2.0  நாளை முதல் 30ஆம் தேதி வரை  புனித நகரான காசியில் (வாரணாசி) நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி –  வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக கங்கை நதியின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்கள் அடங்கிய 216 கொண்ட குழுவினர் நேற்று (டிச.15) சென்னையில் இருந்து புறப்பட்டனர். அவர்களை   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வழி அனுப்பி வைத்தார்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) காசித் தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்கிறார்கள். காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.

கலாச்சாரம், ரயில்வே, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தகவல் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து இந்தக் காசி தமிழ் சங்கமத்தை கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

Tags: kasi tamil sangam2yogifirst rail to kasiPM ModitamilnaduKASI
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!

Next Post

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies