திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!
Jul 7, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், விவாதத்துக்குப் பிறகு இன்று நிறைவேற்றப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி.), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ.இ.சி.) ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, மேற்கண்ட மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

ஆனால், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் 2 பேர் குதித்து புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட மசோதாக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இம்மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தின் மீது பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர், மசோதாக்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியதற்காக பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து, இம்மசோதாக்கள் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

Tags: ParliamentLok SabaDiscussrevised criminal reform bills
ShareTweetSendShare
Previous Post

அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!

Next Post

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

Related News

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies