2023 : இஸ்ரோ சாதனைகள்!
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 : இஸ்ரோ சாதனைகள்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சில சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல்வேறு சாதனைகள் புரிந்து உலகின் முன்னோடி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த வருடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடத்தக்க சில சாதனைகளைப் படைத்துள்ளது.

அந்த சாதனைகளைக் குறித்துப் பார்ப்போம் :

1. சந்திரயான் 3 :

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் – 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலம் ஏவப்பட்டது.

புவிவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த சந்திரயான் – 3 விண்கலம் ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. சந்திரயான் – 3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆகஸ்ட் 24ம் தேதி விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்தது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரையும், நிலவின் மேற்பரப்பையும் பிரக்யான் ரோவரில் இருந்த கேமரா புகைப்படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், நிலவின் தென் துருவத்தில் சல்பர் உள்பட பல்வேறு தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்து முடிவுகளை பூமிக்கு அனுப்பியது.

நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ பகுதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 4ம் தேதி உறக்க நிலைக்கு சென்றது.

2. ஆதித்யா எல்-1 :

சூரியனை ஆய்வு செய்வதற்கு கடந்த செப்டம்பர் 2ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே லாக்ராஞ்சியன் புள்ளி-1 என்ற பகுதி உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை 125 நாட்கள் பயணம் செய்து லாக்ராஞ்சியன் புள்ளி-1 பகுதிக்கு சென்றடைய உள்ளது. அங்கிருந்து சூரியனின் செயல்பாடுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்கிறது.

3. ஜிஎஸ்எல்வி மார்க்-3 :

இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியது. மார்ச் 26ஆம் தேதி 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வணிக நோக்கத்துடன் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் 450 கிலோமீட்டர் தொலைவில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

4. ராக்கெட் சோதனை வெற்றி :

விண்வெளி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப புதிய ராக்கெட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. செயற்கைக்கோள்களை சுமந்து சென்று விண்ணுக்கு அனுப்பி விட்டு ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்துவிடும். அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், ஏப்ரல் 2ம் தேதி மறுபயன்பாட்டு ராக்கெட் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொண்டது. இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரில் ராக்கெட் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. நடுவானில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து ராக்கெட் வாகனம் தனியாக அனுப்பப்பட்டது.

அதன்பின்னர், ராக்கெட் தன்னிச்சையாக செயல்படத்தொடங்கியது. ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைந்த நேவிகேசன் வழிகாட்டி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் வாகனம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் இந்த சோதனை வெற்றியடைந்துள்ளது.

5. ககன்யான் திட்டம் :

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாக உள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்துவருகிறது.

அதன்படி, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ககன்யான் விண்கலம் போன்ற மாதிரி விண்கலத்தை சிறிய வகை ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏவியது. பூமியில் 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ககன்யான் மாதிரி விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் பாரசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் வெற்றிகரமாக விழுந்தது.

அந்த மாதிரி விண்கலத்தை மீட்ட கடற்படையினர் விண்கலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைந்தனர். ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றிபெற்ற நிலையில திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags: ISROisro moon mission chandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

2023 : பாரத பிரதமர் மோடியின் 10 சிறந்த தருணங்கள்!

Next Post

2023: இந்தியா பாதுகாப்பு துறையின் சாதனைகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies