நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

16-வது நிதி ஆணையத்தின் தலைவராக டாக்டர் அரவிந்த் பனகாரியாவை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

மத்திய அரசு 16-வது நிதிக் குழுவை அமைத்திருக்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியாவை நியமனம் செய்திருக்கிறது.

அதேபோல, இந்த ஆணையத்தின் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வரிகளின் நிகர வருவாயை யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிப்பது மற்றும் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் வளங்களுக்கு துணையாக ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் ஆணையம் பரிந்துரைகளை செய்யும்.

மேலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் உருவாக்கப்பட்ட நிதியைக் குறிப்பிடுவதன் மூலம், பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பது குறித்த தற்போதைய ஏற்பாடுகளை ஆணையம் மதிப்பாய்வு செய்து, அதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.  2025-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு நிதி ஆயோக் கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.

நிதி கமிஷன் என்பது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டதாகும். அதாவது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரியை பகிர்ந்தளிப்பதற்கான பார்முலாவை வகுத்தல், பேரிடர் மேலாண்மைக்கு வழங்கப்படும் நிதியை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை நிதி ஆணையம் மேற்கொள்ளும்.

நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள், தாங்கள் பதவியேற்கும் தேதியிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி அல்லது 2025-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்.

Tags: ChairmanAppointsArvind Panagariya16th Finance CommissionCentre constitutes
Share
Tweet
SendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

Next Post

2024 – தோனிக்கு முக்கியமான ஆண்டு – ஏன் தெரியுமா ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies