பா.ஜ.க.வின் 10 ஆண்டு ஆட்சி: நமோ செயலியில் கருத்துத் தெரிவிக்க பிரதமர் அழைப்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் 10 ஆண்டு ஆட்சி: நமோ செயலியில் கருத்துத் தெரிவிக்க பிரதமர் அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 07:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்துத் தெரிவிக்கலாம் என்று நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாடு, உள்ளூர் எம்.பி.யின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களின் மனநிலையை அறிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செயலி மூலம் கடந்த மாதம் ஆய்வு ஒன்றை நடத்தினார். இந்த ஆய்வில், மக்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், சரியாக செயல்படாத எம்.பி.க்களுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்துத் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதவில், “கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நமோ ஆப்பில் உள்ள ‘ஜன் மேன் சர்வே’ மூலம் உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருப்பதோடு, சர்வேயில் பங்கேற்பதற்கான இணைப்பையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்த ஆய்வின் மூலம் மத்திய அரசு நிர்வாகம், தலைமை, மத்திய அரசு நிலையிலான வளர்ச்சி, நமோ செயலியைப் பயன்படுத்துவோரின் தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மேலும், அரசுத் திட்டங்களின் தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் கேள்விகள் உள்ளதாகத் தெரிகிறது.

Tags: PM ModiNamo app10 years BJP RuleInvited peoplecomment
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல்!

Next Post

பெண் குழந்தைகளுக்கான முதல் சைனிக் பள்ளி தொடக்கம்! – ராஜ்நாத் சிங்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies