திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! - அண்ணாமலை
Sep 12, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திராவிட மாடல் ஆட்சி என்று வாய் கிழிய பேசும் திமுக, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் கூடச் செய்து தரவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

திருச்சிக்கு வருகை தந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சேலத்துக்கும் 1,100 கோடி மதிப்பிலான 41.4 கிமீ தொலைவு சேலம்-மேக்னசைட் சந்திப்பு -ஓமலூர் -மேட்டூர் அணைப் பகுதிக்கான ரயில் வழித் தடங்களை இருவழிப் பாதையாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பணம் கிடைத்ததோ அதை விட இரண்டரை மடங்கு அதிக பணத்தை நமது பாரதப் பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க, தமிழகத்தில் ரயில்வே துறையை நவீனப்படுத்த, தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருள்கள், இலவச மருத்துவ சிகிச்சை, தரமான வீடு, கழிவறை, குழாய் மூலம் குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 10.76 லட்சம் கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர். பழங்குடியினருக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2018 முதல் 2021ஆம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1425.18 கோடி ரூபாய்.

தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதி 2.85 கோடி ரூபாய். வனஉற்பத்தி விற்பனை மையங்கள் என்ற திட்டத்தின் மூலமாக மலை கிராமங்களில் செய்யப்படும் உற்பத்தியை விற்பனை செய்ய சுயஉதவி குழுக்களை இணைத்து, கடந்த 3 ஆண்டுகளில் 342 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இந்தியாவில் 3225 வனஉற்பத்தி விற்பனை மையங்கள் உள்ளன.

நாடு முழுவதும் 694 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியினர் சமுதாய மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்திற்கு 6 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. அதில் 2,488 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிகளுக்கு இந்த ஆண்டு 8.67 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி. மத்தியப் பிரதேச மாநில முதல்வராக ஒரு பழங்குடித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆனால், சமூக நீதி, திராவிட மாடல் ஆட்சி என்று வாய் கிழிய பேசும் திமுக, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் கூடச் செய்து தரவில்லை. அவசர காலங்களில் மருத்துவமனை செல்லும்போது கூட துணியில் கட்டி தான் நோயாளிகளையும், கர்ப்பிணி பெண்களையும் தூக்கிச்செல்லும் அவல நிலை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

சேர்வராயன் மலை பகுதியில் உள்ள 93 குக்கிராமங்கள் பல தலைமுறைகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதாவது 2.2 கோடி குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.79 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது தமிழக அரசு. கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது.

இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில் நம்பர் ஒன்னாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, தொகுதிக்கு வருவதே இல்லை. இவரது தந்தை அமைச்சர் பொன்முடி சிறை சென்றதைப் போல, செம்மண் கடத்திய ஊழலுக்கு இவரும் சிறைக்கு செல்வார். ஒரு குடும்பத்துக்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். பாஜகவுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்காக தமிழகம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்தை ஊழலற்ற நேர்மையான மாநிலமாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் மாநிலமாக முழுமையாக மாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: k annamalaiannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் – சிராஜ்!

Next Post

தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies