மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனர்கள் ரவி உப்பால், சௌரப் சந்திரகர் ஆகியோரை துபாய் போலீசார் கைது செய்த நிலையில், ஆயிரத்து 800 பக்கம் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையை ராய்ப்பூர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

இந்த செயலி மூலம் மிகப்பெரிய பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வரை, இலாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை இலஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும், மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சௌரப் சந்திரகரை துபாய் போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கியது.

இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், ஆயிரத்து 800 பக்கம் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையை ராய்ப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை துபாய் அதிகாரிகளுடன் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mahadev app: Chhattisgarh CM in trouble!Mahadev Gambling App Owner Arrested:
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல்: பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

Next Post

ரூ.4,800 கோடியில் பிரித்வி விக்யான் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies