ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!
Apr 29, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால், அத்தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 199 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, மத்திய பார்வையாளர்கள் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பஜன்லால் ஷர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல, துணை முதல்வர்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் பதவியேற்றனர். இதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 22 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஆனால், பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், இலாகா தொடர்பான பரிந்துரையை முதல்வர் பஜன்லால் ஷர்மா, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அனுப்பி வைத்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அந்த வகையில், முதல்வர் பஜன்லால் ஷர்மாவுக்கு உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உட்பட 8 துறைகளும், துணை முதல்வர்களில் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளும், பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறையும், முக்கிய நிர்வாகிகளான கஜேந்திர சிங் கிம்சாருக்கு சுகாதாரத் துறையும், மதன் திலாவருக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Tags: MinistersRajastanPortfolio
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மீனவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பாஜக நிர்வாகிகள்

Next Post

இந்தியாவில் புதிதாக 774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies