நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
Oct 5, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்து.

அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசனர். இதனால், அவையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர், இருவரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கூச்சலிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் பாலிகிராஃப் சோதனைக்கு ஜனவரி 5-ம் தேதி ஒப்புதல் அளித்தனர். நீலம் ஆசாத் மட்டும் மறுத்து விட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோர் நார்கோ பகுப்பாய்வு மற்றும் மூளை மேப்பிங் சோதனைக்கும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் பாலிகிராஃப் தேவை என்றும், கூடுதலாக மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங் தேவை என்றும் தெரிவித்தார்.

அதோடு, சட்ட உதவி ஆலோசகர் அமித் சுக்லா, குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் இருவரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங்குக்கான காரணத்தைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Parliamentsecurity breach
Share
Tweet
SendShare
Previous Post

அரிசி, கோதுமை ஏற்றுமதி… தடை நீக்கம் இல்லை: பியூஷ் கோயல்!

Next Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies