மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஸு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

மேலும், வெற்றிபெற்ற கையோடு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் முகமது முய்ஸு. பின்னர், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது முய்ஸு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல, அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ,மாலத்தீவுக்கு ட்ரோனியர் ரக விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை பயன்படுத்த முகமது முய்ஸு அனுமதி மறுத்ததால்தான் 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

அதாவது, மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்தது. இதனால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழலில், இச்சிறுவனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி வழங்கவில்லை. இதனால் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆகவே, 16 மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி அளிக்காததால்தான் சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான்” என்றார்.

Tags: PresidentMaldivesMohamed muuizu
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.13-ஆம் தேதி திறப்பு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies