ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞானவாபி மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது.

இந்த மசூதி 17-ம் நூற்றாண்டு முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே, ஞானவாபி மசூதி வளாகத்தில் அமைந்திருக்கும் சிருங்கார கௌரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறையினர் மீண்டும் ஆய்வைத் தொடங்கினர்.

அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிவலிங்கத்தை மூடி சீல் வைத்து பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது ஞானவாபி வளாகம் அமைந்திருக்கும் இடத்தில் ஏற்கெனவே மிகப்பெரிய இந்து கோவில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொல்லியல் துறையின் நிபுணர் குழு காசியில் ஞானவாபி விவகாரத்தை விசாரிக்கும் மாவட்ட நீதிபதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஞானவாபி கட்டடத்தில் தொல்லியல் துறை சேகரித்த ஆதாரங்கள், ஒரு கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

“கட்டடத்தின் ஒரு பகுதி, குறிப்பாக மேற்கு சுவர் இந்து கோயிலின் மீதமுள்ள பகுதியாகும். ஏற்கெனவே இருந்த கோவிலின் தூண்கள் உள்ளிட்ட பகுதிகள் மசூதியின் விரிவுபடுத்தவும், சஹான் கட்டுவதற்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிக்கை நிரூபிக்கிறது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வசுகானா என்று அழைக்கப்படும் சிவலிங்கம் மசூதியின் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. கட்டிடத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் ஜனார்த்தனன், ருத்ரா, உமேஸ்வரா உள்ளிட்ட பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது ஒரு கோயில் என்பதற்குச் சான்றாகும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த வழிபாட்டுத் தலம் இந்து மதத்திற்கு உரியதாக இருந்தது என்பதையும், இப்போதும் அது இந்துக் கோயிலின் தன்மைகளைக் கொண்டுள்ளது என்பதையும் தொல்லியல் துறை சேகரித்துள்ள ஆதாரங்கள் நிரூபிக்கின்றன” என கூறினார்.

இதனால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 யின் 4வது பிரிவின்படி, இந்தக் கட்டிடத்தை இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்துடன் மசூதியில் காணப்படும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய இந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஞானவாபி மசூதியை மரியாதையுடன் வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றிவிட்டு, காசி விஸ்வநாதரின் இடத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்கவும் மசூதி நிர்வாகக் கமிட்டிக்கு முன்வர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இரு சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளைப் பேண, இந்த நடவடிக்கை முக்கியமானது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் நம்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: VHPGnanavabi Mosque
Share
Tweet
SendShare
Previous Post

தண்ணீர் உள்ள புதிய கிரகம்!-நாசா கண்டுபிடிப்பு

Next Post

ஞானிவாபி மசூதி விவகாரம் : விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies