இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!
Sep 5, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!

பாஜக கூட்டணியில் இணைவதாக ஜெயந்த் சவுத்ரி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிகழ்வு  இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரான சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட  நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டீரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிவி நரசிம்மராவ், சவுத்ரி  சரண் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு  பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.  அதேபோல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய சிவிலியன் விருது  வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரனும், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த முடிவு நிரூபிப்பதாக கூறியுள்ளார்.

இது ஒரு  உணர்ச்சிகரமான நாள். எனக்கான தருணம்.குடியரசுத்தலைவர்,பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் இது அவரது தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.

முந்தைய அரசாங்கங்களால் இன்று வரை செய்ய முடியாதது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் நிறைவேறியுள்ளது.  பா.ஜ.க. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும்  செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது என தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.  இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேபோல், கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Lok Sabha pollsBJP-RLD allianceblow to INDIA blocformer Prime Minister Chaudhary Charan SinghJayant Chaudhary
Share
Tweet
SendShare
Previous Post

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! – மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies