WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!
Jun 14, 2026, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கரை அழைத்து வந்தது இந்த தொடரை நடத்திய நிர்வாகம்.

அவருக்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மொத்த பில்டப் மற்றும் அண்டர்டேக்கர் எனும் பிம்பத்தை ஒரே நொடியில் காலி செய்தார் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சவுதி அரேபியா நாட்டின் அல் நாசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

அவரது வருகைக்கு பின் சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சவுதி அரேபியாவின் உள்ளூர் தொடர்களை பார்க்கப் துவங்கி இருக்கின்றனர்.

இது எல்லாமே சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் விருப்பத்தின் பெயரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கால்பந்தை போலவே, ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவில் WWE ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அதற்கு சவுதி அரசு பெரும் தொகையை அவர்களுக்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் பலர் WWE ரசிகர்களாக இருப்பதால் தான் WWE வீரர்களை நேரில் காண ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து தொடர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் அண்டர்டேக்கரை வைத்து கோப்பையை அறிமுகம் செய்தனர் போட்டி ஏற்பட்டாளர்கள்.

அதே போல WWE இறுதிப் போட்டிக்கு முன் கோப்பையை அறிமுகம் செய்தார் அண்டர்டேக்கர். சாதாரணமாக இல்லாமல் WWE போட்டிகளில் வருவது போலவே கருப்பு கோட் அணிந்து, WWE-வில் அண்டர்டேக்கருக்கு என ஒலிக்கப்படும் இசையுடன் அவர் உள்ளே வந்தார்.

இரு அணி வீரர்களும் இரண்டு பக்கமும் நின்று இருந்தனர். அவர்கள் முன் தனக்கே உரிய கம்பீரத்துடன் அண்டர்டேக்கர் கோப்பையை தூக்கி அறிமுகம் செய்தார். அப்போது ரொனால்டோ அருகே நின்ற வீரரிடம் ஏதோ சொல்லி அண்டர்டேக்கரை பார்த்து சிரித்தார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வேகமாக பரவியது. சிலர் ரொனால்டோ அண்டர்டேக்கரை பார்த்து ரொனால்டோ ஆச்சரியப்பட்டு சிரித்தார் என கூறினாலும், பலரும் ரொனால்டோ அவரது பில்டப்பை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டார் எனக் கூறி உள்ளனர்.

பல கோடி ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்ட அண்டர்டேக்கரை ஒரே நொடியில் சிரித்து காலி செய்து விட்டார் ரொனால்டோ.

Tags: Football player RonaldoWWE legend!
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

Next Post

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies