நெல்லை-மேலப்பாளையம் இடையே பராமரிப்புப் பணி: ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை-மேலப்பாளையம் இடையே பராமரிப்புப் பணி: ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் நடைபெற இருப்பதால், விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரத்திலிருந்து இன்று, 25-ஆம் தேதி மற்றும் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் – 20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 23-ஆம் தேதி, 26-ஆம் தேதி மற்றும் 28-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் விரைவு ரயில் (வண்டி எண் – 20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் சென்றடையும்.

இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் – 12689) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ஆம் தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் (வண்டி எண் – 12690) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும், குருவாயூரிலிருந்து 27-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண் – 16128) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.

மேற்குவங்க மாநிலம் அவுராவிலிருந்து 26-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண் – 12665) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: guruvayurmaintenance workexpress railtrains
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

Next Post

4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies