மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்! - பிரதமர் மோடி
Sep 13, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

“நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்.

தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். தூத்துக்குடியில் ரூ.4,000 கோடியில் சாலைகளை மேம்படுத்த 4 திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரயில்கள், சாலை வழியே பயணிக்கும் மக்களுக்காக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 75 கலங்கரை விளக்கங்கள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறேன். தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு எனத் தெரிவித்தார்.

சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியடையும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் புதிய சகாப்தத்தை படைக்க உள்ளது.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகவிருக்கிறது. கசப்பான உண்மையை சொல்கிறேன்; முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன.

மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்.  தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், மத்திய அரசின் திட்டங்களை பிரசுரித்து வெளியிடாது. ஒன்றிய அரசின் திட்டங்களை பத்திரிகைகள் பிரசுரித்து வெளியிடுவதற்கு இங்குள்ள அரசு விடாது, இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன், மூன்றாவது முறையாக நாம் அரசு அமைக்க போகிற நேரத்தில், இந்த உத்தரவாத்ததை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகமக்கள் என் மீது அன்பு மழையை பொழிந்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Next Post

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies