கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! - ராஜ்நாத் சிங்
Sep 12, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்.

கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2024 மார்ச் 5 அன்று திறந்து வைக்கிறார். நவீனக் கட்டிடம் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் பேரரசின் நினைவாக ‘சோழர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாரதிய நௌசேனாவின் நடுத்தர மற்றும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு மேம்பட்ட தொழில்முறை ராணுவக் கல்வியை வழங்குவதற்காக கடற்படைப் போர்க் கல்லூரி 1988-ம் ஆண்டில் ஐ.என்.எஸ் கரஞ்சாவில் நிறுவப்பட்டது.

இந்தக் கல்லூரி 2010-ல் கடற்படை போர்க் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 2011-ல் கோவாவில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. உயர் ராணுவக் கல்விக்கான முதன்மையான சின்னமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற  கண்ணோட்டத்துடன், கல்லூரி செயல்படுகிறது.

ஆயுதப்படை அதிகாரிகளை உத்தி மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் தலைமைக்கு தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்தக் கல்லூரி கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது.

இதில் நமது கடல்சார் அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று திறந்த, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை வளர்ப்பதில் ஒத்துழைக்கிறார்கள்.

இது நமது பிரதமரின் ‘சாகர்’ தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிக்கிறது. கடற்படைப் போர்க் கல்லூரி இந்தியக் கடற்படையின் போர் விளையாட்டு மற்றும் ஆர்க்டிக் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமாகவும் உள்ளது.

கல்வி அறிவுறுத்தல், ஆராய்ச்சி மற்றும் போர் விளையாட்டுகளுக்காக கடற்படை போர் கல்லூரியின் கட்டிடம் சோழ வம்சத்தின் கடல் வலிமையால் ஈர்க்கப்பட்டது. கட்டமைப்பின் மையத்தில்  ஒரு சுவரோவியம் உள்ளது.

இது கி.பி 1025-ல் இந்தியப் பெருங்கடலைக் கடந்து, உயர் கடல்களைக் கடந்து ஸ்ரீவிஜயப் பேரரசுக்கு சென்ற ராஜேந்திர சோழனின் பயணத்தைச் சித்தரிக்கிறது. இந்த கட்டிடத்தின் பெயர் கடந்த காலத்தில் இந்தியாவின் கடல்சார் செல்வாக்கையும், நிகழ்காலத்தில் ஒரு கடல் சக்தியாக அதன் மறுமலர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Defense Minister Rajnath SinghNAVAL WAR COOLEGE
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன்!

Next Post

WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies