மகா சிவராத்திரி : 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
May 2, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி : 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9 மற்றும் 10-ஆம் தேதிகள் (சனி, ஞாயிறு) வார விடுமுறை தினங்கள்  என்பதாலும், சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொள்வர்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு, மார்ச் 7-ஆம் தேதி 270 பேருந்துகளும், 8-ஆம் தேதி 390 பேருந்துகளும், 9-ஆம் தேதி 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், 70 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய  இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Tags: tamilnaduspecial busesmaha shivratritn transport corporationweekends
ShareTweetSendShare
Previous Post

மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !

Next Post

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் ஓய்வு !

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies