சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு!
Aug 9, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 10:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவுத் துறையில், பொதுமக்கள் கருத்தைக் கேட்டறியாமல், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று திமுக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், சுமார் 50% அளவுக்கு வழிகாட்டி மதிப்பை திமுக அரசு முன்னறிவிப்பின்றி உயர்த்தியதால், பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017 ஆம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், திமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வண்ணம், தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வந்தது. தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த பின்னரும், தமிழக அரசு அவற்றைக் கண்டுகொள்ளாமல் கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வந்தது.

திமுக அரசின் இந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான, சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மீண்டும் 2017 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டி மதிப்பைப் பின்பற்ற வலியுறுத்தியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்றும், கடந்த ஜனவரி 17, 2024 அன்றும், அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம்.

இன்றைய தினம்,  சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசு, பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்று, முந்தைய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிரோதமாக இத்தனை நாட்களாகக் கூடுதல் கட்டணம் வசூலித்து, மக்களை அவதிக்குள்ளாக்கிய திமுக அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

இத்தோடு நில்லாமல், இத்தனை நாட்களாக பொதுமக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்கே திருப்பித் தர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiDMKtamilnadu bjp presidentchennai high courtuguideline value for assests
Share
Tweet
SendShare
Previous Post

ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இங்கிலாந்து பேட்டிங்!

Related News

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

Load More

அண்மைச் செய்திகள்

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies