திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 13, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

  கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

“மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக திமுக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது.

திமுகவின் அயலக அணியில் இருந்தவர் தான் ஜாபர் சாதிக்.  இருப்பினும் இதுகுறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார்.  ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை ஏன் உதயநிதி ஸ்டாலின் டெலிட் செய்தார். இதில் திமுக டிஜிபியை பலிகடா ஆக்க பார்க்கிறது.
சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்னைகளும் தீரும். கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.  கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

ஆ. ராசா குறித்து நான் வெளியிட்ட ஆடியோ, பொய் என்று அவர் சொல்லட்டும், அரசியலில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.

பாஜகவுக்கு அளிக்கும் ஓட்டு செல்லாது என்று சொல்கிற கட்சியிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேளுங்கள். அவர்களின் எம்பிக்கள் வெற்றி பெற்றால், டெல்லி சென்று யாரிடம் மனு கொடுப்பார்கள்.

பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு. கோவை மட்டுமல்லாமல், பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், ஒரு மாநிலத் தலைவராக எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு, வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது.  இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது திமுகவுக்கு தான் என தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

புதிய சர்ச்சை: பிளஸ் டூ தேர்வில் 5 ஆயிரம் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

Next Post

பாகிஸ்தானில் கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை : காரணம் என்ன?

Related News

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies