எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Sep 10, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். ஆனால் பாஜக அரசாங்கம் இந்த கிராமங்களை “முதல் கிராமங்கள்” என்று கருதுவதாகவும் அவர் கூறினார்.

எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது. நாட்டின் எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்கிறார்கள். எதிரிகள் வந்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக  எல்லையோர மாவட்டங்களையும், கிராமங்களையும் வளர்ச்சியடையாமல் வைத்துள்ளனர்.

ஆனால் எல்லைப் பகுதிகளையும், எல்லைக் கிராமங்களையும் கடைசி கிராமங்களாகக் கருதாமல், நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நாட்டின் எல்லைகள் இத்துடன் முடிவதில்லை. நாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. சுமார் 4 கோடி ஏழைகள் பிரதமர் வீடு திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுள்ளனர். பார்மரில், சுமார் 1.75 லட்சம் ஏழைகள் இந்த திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

பார்மர் நகரின் எல்லையில் ரூ.72,000 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்  தொடங்கப்படவுள்ளது.வரும் காலங்களில் இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாகி இளைஞர்களுக்கு புதிய பாதைகள் உருவாக்கப்படும்.

நான் மூன்றாவது முறையாக பதவியேற்கும் போது,  இங்கு வந்து  சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பேன் என உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் திட்டத்தில் காங்கிரஸ் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்த காலத்தில் ஜல் ஜீவன் மிஷனில் பெரும் ஊழலில் ஈடுபட்டது. ராஜஸ்தானுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Congressbjp governmentpm modi campaginPM Modi in BarmerEastern Rajasthan Canal Project
Share
Tweet
SendShare
Previous Post

பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தலைவர் பதவியில் இருந்து மேரி கோம் விலகல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies