ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாக திமுக செயல்படுகிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 18, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாக திமுக செயல்படுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்.

திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனைத் தட்டிக் கேட்ட வழக்கறிஞர்  மாரிசெல்வம் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி… pic.twitter.com/Ln6HyViP1Y

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 24, 2024

ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்த்தரமானது.

ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

உடனடியாக, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்கியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட திமுகவுக்கு வன்மையான கண்டனங்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMK is working to encourage ration rice smuggling gangs! - Annamalai accusation!
Share
Tweet
SendShare
Previous Post

மணல் கொள்ளை ஊழலில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தொடர்பு : அமித் ஷா

Next Post

பணிந்த பதஞ்சலி கடிவாளம் போட்ட உச்சநீதிமன்றம்!

Related News

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies