உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில், சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த பொதுக்கூட்டத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாஜக மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பின்னர் பிரயாக்ராஜில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.