ஜூன் 4 ஆம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போதுபூத் ஏஜெண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசக்கபட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் மட்டும்தான் சட்டம்-ஒழுங்கு என்பது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கும், நாட்டின் ஆதரவு சக்திகளுக்கும் இடையே நடக்கும் சண்டையாக உள்ளதாக தெரிவித்தார்.
ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சிற்கே இடமில்லை எனக்கூறிய அவர், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என கேட்டுக் கொண்டார்.
மேலும், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்பது காலத்தின் கட்டாயம் என குறிப்பிட்டார். மேலும், இண்டியா கூட்டணியின் கனவுகளை மக்கள் சுக்குநூறாக உடைக்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.