ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் : ரயில்வே துறை!
Sep 13, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் : ரயில்வே துறை!

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கொல்கத்தா சீல்டா இடையே செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் டார்ஜிலிங் அருகே சென்று கொண்டிருந்தது.

காலை 8:45 மணியளவில் ரங்கபானி ரயில் நிலையம் அருகே சென்ற போது சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்புறம் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது.

இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இதனிடையே மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே வாரிய தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரக்கு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், பயணிகள் ரயிலின் கார்டு உள்ளிட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிக்னலை பின்பற்றாமல் சரக்கு ரயில் சென்றதே விபத்திற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

Tags: The families of those killed in the train accident will receive Rs. 10 lakh relief: Railway Department!
Share
Tweet
SendShare
Previous Post

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.53,520க்கு விற்பனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies