டெண்டர் வழங்கியதில் முறைகேடு? தணிக்கை அறிக்கையால் அதிர்ச்சி!
Jun 24, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெண்டர் வழங்கியதில் முறைகேடு? தணிக்கை அறிக்கையால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

பொதுவாக அரசுப்பணிக்கான ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், ஒரு ஒப்பந்ததாரர் மீது மற்றொரு ஒப்பந்ததாரர் தாக்கத்தை ஏற்படுத்தி ஒப்பந்தப் புள்ளிகளில் முறைகேடு செய்வதற்கான சாத்தியம் உள்ளது.

எனவே அரசுப்பணிக்கு ஒப்பந்தம் வழங்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் சில டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது தணிக்கை அறிக்கை.

இந்திய தணிக்கைத் துறை தலைவரின் 2023-ஆம் ஆண்டுக்கான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 35 டெண்டர்களை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்த போது, அந்தப் பணிகள் ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 27 டெண்டர்களையும், நீர்வளத்துறை சேலம் நிர்வாக பொறியாளர் ஆறு டெண்டர்களையும் இவ்வாறு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தந்தையும் மகனும் ஒரே முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் 27 டெண்டர்களில் பங்கேற்றுள்ளனர். அதில் 20 டெண்டர்கள் ஒரே இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

சேலம் நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு, தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் வெளியிட்ட ஆறு டெண்டர்கள், விதிகளை மீறியும் உலக வங்கியின் கொள்கைகளை மீறியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை கொண்ட இரு ஒப்பந்ததாரர்களுக்கே பணிகள் தரப்பட்டுள்ளதாகவும் ஒரு டெண்டரில் தந்தையும் மகனும் பங்கேற்று பணியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது தணிக்கை அறிக்கை.

இதே போல் டாஸ்மாக் நிறுவனம் மது ஆலைகளுக்கு கொள்முதல் ஆணை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சில ஆலைகள் அதிக பலனை அடைந்ததாகவும், மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணைகள் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கொள்முதல் மற்றும் சில்லரை விற்பனை கொள்கை மிகப்பழையது என்று கூறியுள்ள தணிக்கை அறிக்கை, கொள்முதலில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Irregularity in tender award? Shocked by the audit report!
ShareTweetSendShare
Previous Post

கூட்டம் கூட்டமாக வெளியேறும் பாகிஸ்தான் இளைஞர்கள்!

Next Post

முடிவுக்கு வந்த 150 ஆண்டு கால நடைமுறை!

Related News

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies