ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!
Oct 8, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்துகிறது.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சகம் மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை 4 ஜூலை 16 ஆம் தேதி காணொலி மூலம் நடத்தவுள்ளது. மத்திய கப்பல் துறை செயலாளர்  டி. கே. ராமச்சந்திரன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க உள்ளார்.

இந்தியா முழுவதும் கடல்சார் போக்குவரத்திலும் பிற நீர்வழிப் போக்குவரத்திலும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் சார்ந்த கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரித்தல், கடல்சார் கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழித்தடங்கள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாநில குழுக்களின் பணிகளில் உள்ள முன்னேற்றம், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், கடலோர, ஆற்றுக் கப்பல் சுற்றுலா தொடர்பாக மாநிலங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,  உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்பதை  உணர்ந்து, மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுவை நிறுவியுள்ளது. கடல்சார் துறைகளிலும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழுக்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

ஒவ்வொரு மாநில குழுவும் மாநில தலைமைச் செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படுகிறது. பெரிய துறைமுகங்கள், கடல்சார் வாரியங்கள், மாநில பொதுப்பணித்துறை,  சுற்றுலாத் துறை, மீன்வளத் துறை, ரயில்வே,  தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் உள்ளன.

தற்போது, ஆந்திரா, மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, புதுச்சேரி, ராஜஸ்தான், பீகார், அசாம், கோவா, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

Share
Tweet
SendShare
Previous Post

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து வெற்றி பெற்ற திமுக : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies