திமுகவினர் அதிகார மமதையில் இருக்கின்றனர்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 19, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவினர் அதிகார மமதையில் இருக்கின்றனர்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 02:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை விமர்சித்தால், பள்ளி மாணவரைக் கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, திமுகவினர் அதிகார மமதையில் இருப்பதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, காவல் நிலையம் அருகிலேயே, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவரை, திமுகவைச் சேர்ந்த நபரும் அவரது நண்பர்களும், கத்தியால் குத்தியும், கடுமையாகத் தாக்கியும் கொலை முயற்சி செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான பள்ளி மாணவர், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். திமுக அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக, பழுதடைந்த சாலையில் சென்ற போது வாகனத்திலிருந்து தவறி விழுந்த மாணவர், திமுகவை விமர்சித்ததால், திமுகவினர் அவரைக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை விமர்சித்தால், பள்ளி மாணவரைக் கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, திமுகவினர் அதிகார மமதையில் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக தொண்டர் என்ற பெயரில் இது போன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்குப் பேராபத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? உடனடியாக, பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Tamlak is this power! - Annamalai alectin
Share
Tweet
SendShare
Previous Post

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! – 2 தொழிலாளர்கள் பலி!

Next Post

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Related News

விமானப்படைக்கு FOC LCA உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் : HAL நிறுவனங்கள் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies