கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான, இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகவும், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக அருளினை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.