திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானை பல்கலைக்கழக துணை வேந்தர் கலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மினி மராத்தான் போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள், கொடைக்கானல் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.