என்டாட் பாராமெடிக்கல்ஸ் நிறுவனத்தின் பிரெஸ்வியூ என்ற கண் சொட்டு மருந்துக்கான அங்கீகாரத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரத்து செய்தது.
பிரெஸ்வியூ சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால், வாசிப்பதற்கான கண்ணாடி அணிய தேவையில்லை என என்டாட் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்ததாக தெரிகிறது.
அதேசமயம் பிரெஸ்வியூ மருந்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், அங்கீகாரமற்ற முறையில் விளம்பரம் வெளியிடப்பட்டதை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தீவிரமாக கருதியது.
இதனால் அந்த மருந்துக்கான அங்கீகாரத்தை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக என்டாட் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.