ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதிவரை நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மக்களின் அடையாளமாகவும், அரசின் அனைத்துவித சேவைகளை பெறுவதற்கும் அவசியமாக இருக்கும் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்துவோர், தங்களின் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியது. மேலும், செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.
இதையடுத்து நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் தங்களின் ஆதார் அட்டையை புதுப்பித்தனர். இந்நிலையில், ஆதார் விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நாளை மறுநாளுடன் நிறைவடைய இருந்த கால அவகாசத்தை, டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.