சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்க்ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டில் 226 வழக்குகளும், நடப்பாண்டின் 8 மாதங்களில் மட்டும் 241 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
நாளுக்கு நாள் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.