பொள்ளாச்சி அடுத்த செமனாம்பதி பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக கேரள எல்லைப்பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் சபீஸ் என்ற நபர் எரி சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பியோடிய சபீஸை தேடி வருகின்றனர்.