திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரை சேர்ந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த மே மாதம் 4-ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்திவரும் நிலையில் ஜெயக்குமாரின் உறவுக்கார பெண் உள்பட 3 பெண்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.