இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லுாரி - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லுாரி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய இலங்கை வரலாற்றில், மூன்றாவது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன், சிறிமாவோ பண்டார நாயக்க மற்றும் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இலங்கை பிரதமராக பதவி வகித்துள்ளனர். ஆனால் , முன்னவர்களைப் போல் எந்த குடும்ப அரசியல் பின்புலமும் இல்லாமல் ஹரிணி அமர சூரிய பிரதமர் ஆகியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வாரம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் , தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் 56 வயதான அநுர திஸாநாயக்க வெற்றி பெற்று, இலங்கையின் 9 வது அதிபராக பதவி ஏற்றார்.

அநுர திஸாநாயக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த 54 வயதான ஹரிணி அமர சூரிய, இப்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.

அவருக்கு, நீதி,கல்வி,தொழிலாளர்,தொழில்,அறிவியல்,தொழில்நுட்பம் சுகாதாரம்,முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

1970 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த ஹரிணி அமர சூரிய, கொழும்பு பிஷப் கல்லூரியில் படிப்பை முடித்தார். பிறகு, இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பின் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பெற்றபின், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

பல நாடுகளில் பல கல்லூரிகளில் படித்திருந்தாலும், டெல்லி இந்து கல்லூரியில் ஹரிணி அமர சூரிய படித்த காலம் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

அரசியல், கலை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல வெற்றியாளர்களை உருவாக்கிய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட டெல்லி இந்து கல்லூரியின் முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா, ஹரிணி பிரதமரானதற்கு பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், 1991ஆம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரை சமூகவியல் மாணவியாக இருந்ததாகவும், ஹரிணியின் வெற்றிக்கு இந்து கல்லூரி முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் அஞ்சு ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அதே போல், இலங்கை பிரதமருடன், இந்து கல்லூரியில் ஒன்றாக படித்த இந்தி திரைப்பட இயக்குனர் நளின் ராஜன் சிங், கல்லூரி விழாக்கள் மற்றும் விவாதங்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஹரிணி பிரதமராகி இருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.

கல்விப் பின்னணி மற்றும் இந்தியாவுடனான ஹரிணி அமரசூரியவின் தொடர்புகளைக் கருத்தில் கொண்டே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், குறிப்பாக கல்வி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர திஸாநாயக்க, நிதி, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா உட்பட பல முக்கிய துறைகளைத் தன் வசமே வைத்திருக்கிறார்.

வரிகளை குறைக்கும் முடிவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது ஆகியவை இலங்கை முதலீட்டாளர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.

மேலும், ஏற்கெனவே இலங்கையின் 25 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை மறுசீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், இலங்கையின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்..

இந்நிலையில் தான், 2020ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்த ஹரிணியை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இலங்கையின் பிரதமர் ஆக்கப் பட்டிருக்கிறார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் அநுர திஸாநாயக்க மற்றும் அமரசூரியவின் தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எனவே அவர்களால் நினைத்த மாதிரி எந்த சீர் திருத்த சட்டங்களையும் கொண்டுவர முடியாது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் அநுர திஸாநாயக்க, வரும் நவம்பர் 14ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்

Tags: Sri Lankan presidential electionSri Lanka's new Prime MinisterHarini Amarasuriya
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Next Post

ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணுகுண்டு வீசுவோம் – அதிபர் புதின் எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies