தஞ்சாவூரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமியின் தந்தை, மன்னார்குடியில் உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை செலுத்துவது தொடர்பாக நிதி நிறுவன ஊழியரான முத்துப்பாண்டியன் தொடர்பு கொண்டபோது அவரிடம் சிறுமி பேசியுள்ளார்.
அப்போது, கடன் தொகையை செலுத்துவது தொடர்பாக நிறுவனத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி சிறுமியை முத்துப்பாண்டியன் அழைத்துள்ளார்.
இதை நம்பி மன்னார்குடிக்கு சென்ற 17-வயது சிறுமி, தஞ்சை மாவட்டம் ராஜாமடம் பகுதிக்கு கடத்திச் சென்று தனது நண்பர் தவசீலனுடன் இணைந்து முத்துப்பாண்டியன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முத்துப்பாண்டியன், தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.