மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி மற்றும் விளையாட்டுக்கு தமிழ்நாடு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக என இந்திய கால்பந்து வீராங்கனை இந்துமதி கதிரேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வென்ற இந்துமதி கதிரேசனுக்கு கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கிராமத்தில் இருந்து சென்று இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஆனதில் பெருமையடைவதாக தெரிவித்தார்.