நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்தது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 193 பேர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.