உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது பொறுப்பற்ற முறையில், ‘யா.. யா’ என ஆங்கிலத்தில் பதிலளித்த வழக்கறிஞரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்தார்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய்க்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தபோது அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ‘யா.. யா’ என ஆங்கிலத்தில் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
இதனால் கடுப்பான தலைமை நீதிபதி, இது ஒன்றும் காபி கடை இல்லை என்றும், கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்குமாறும் கண்டித்தார்.
அத்துடன் சட்டப் பிரிவு 32-இன்கீழ் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மனு தாக்கல் செய்ய இயலாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.