உத்தர பிரதேசத்தில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கக் கோரிய சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. அஃப்சல் அன்சாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காஜிப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத நிகழ்ச்சிகளில் இறைவனின் பிரசாதமாக கருதி, கஞ்சாவை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துவதால், புனிதமான மூலிகையான கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், கஞ்சா இலையிலிருந்து தயாரிக்கப்படும் பாங்க் என்ற பானத்தை அருந்த அனுமதியளிக்கும்போது, கஞ்சாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.
கஞ்சாவை சட்டபூர்வமாக்கக் கோரிய அஃப்சல் அன்சாரியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் மீது கோத்வாலி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, தனது கருத்துக்காக அஃப்சல் அன்சாரி மன்னிப்பு கோரினார்.