கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
அஸ்ஸாமில் ஏற்கெனவே டாடா குழுமத்துக்குச் சொந்தமான செமிகண்டக்டர் ஆலை செயல்பட்டுவரும் நிலையில், உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், குஜராத்தில் 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனுர் அருகே உள்ள ஒழூர் கிராமத்தில், செமிகண்டக்டர் ஆலைக்கான உதிரி பாகங்களை விநியோகிப்பதற்கான துணை ஆலை ஒன்று டாடா குழுமம் சார்பில் நிறுவப்படவுள்ளது.
இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி, கேரள அரசுடன் டாடா குழுமம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.