தேனி அருகே இடப்பிரச்சனையால் டிராக்டர் ஏற்றி பெண்ணை கொலை செய்ய முயன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொடுவிலார்பட்டி அருகே மரியாயிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள், தனது இடத்தில் புதிததாக வீடு கட்டி வருகிறார்.
இந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், தனது அண்ணன் பால்ராஜ் மற்றும் பெருமாள் சாமி ஆகியோருடன் சென்று பழனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். அத்துடன் டிராக்டரை ஏற்றி கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.