கொடைக்கானலுக்கு இ-பாஸ் பதிவு செய்து இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் வாகனங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக கொடைக்கானலுக்கு வர சுமார் 2 லட்சத்து 91 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இ-பாஸ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளது.